வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ஆசை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அஜித். ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின் பல போராட்டங்களை சந்தித்த அஜித் தமிழில் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இருப்பினும் அப்படம் அஜித்திற்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.இதன் பின்பு இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு வசந்தின் இயக்கத்தில் ஆசை படத்தில் நடித்தார் அஜித். அப்படம் அஜித்திற்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆசை நாயகன் அஜித் என ரசிகர்கள் இவரை ஆசை ஆசையாக அழைக்க துவங்கினர்
ஆசை படத்தை தொடர்ந்து அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன் என தொடர்ந்து காதல் படங்களாகவே நடித்து வந்தார். இப்படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உருவானார்கள். ஒரு வெற்றிக்காக போராடி வந்த அஜித்திற்கு தொடர்ச்சியான வெற்றிகள் புது உத்வேகத்தை அளித்தது.
எனினும் இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் அஜித். மேலும் அக்காலத்தில் அரவிந்த் சாமிக்கு அடுத்தபடியாக அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வந்தார் அஜித். அதற்கு மிகமுக்கிய காரணம் அவர் நடித்த காதல் படங்களின் வெற்றிகள் தான் எனலாம். இதன் பின்பு மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களில் நடிக்க துவங்கிய அஜித் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்
ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் என தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்து வந்த அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது வாலி திரைப்படம். எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டியிருப்பார் அஜித். அத்தோடு அப்படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. அதுவரை காதல் படங்களிலேயே நடித்து வந்த அஜித்திற்கு வாலி திரைப்படம் அவரின் திரைவாழ்க்கையையே திருப்பி போட்டது. இதையடுத்து அமர்க்களம்,வில்லன், அட்டகாசம், வரலாறு என ஆக்ஷன் படங்களாகவும், வித்யாசமான கதைக்களம் உடையே படங்களாகவும் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தார் அஜித்
இவ்வாறுஇருக்கையில் இன்று கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி வரும் அஜித் ஆசை படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் திரைவாழ்க்கையில் முதல் வெற்றிப்படமாக அமைந்த ஆசை படத்திற்காக அஜித் 25 ஆயிரம் சம்பளமாக பெற்றாராம்.
மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ஆசை படத்திற்கு முதலில் அஜித்திற்காக 15 ஆயிரம் தான் சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனால் அதன் பின்னர் அஜித்திற்கு 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என்னதான் ஆசை படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் அப்படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிகர் சுரேஷ் தான் டப்பிங் பேசியிருப்பார். மேலும் இது அஜித்திற்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்ததாம். என்னதான் படம் வெற்றி பெற்றாலும் நம் குரலில் டப்பிங் பேசமுடியவில்லையே என்ற வருத்தம் அஜித்திற்கு மிகப்பெரியளவில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!