• Sep 20 2024

கோப்ரா படத்தில் நடிக்க கே.ஜி.எப் பட நடிகை வாங்கிய சம்பளம்-தமிழ் முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கின்றாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமாயின் அந்தப் படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் ஆவார். இவ்வாறாக எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவர். தற்போது இவரது நடிப்பில் சியான் 60 என்னும் ‘கோப்ரா’ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.

அந்தவகையில் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்திலும், எஸ்.எஸ் லலித் குமாரின் செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பிலும் ‘கோப்ரா’ திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் கதாநாயகனான நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார்.

இவருக்கு தமிழில் இதுவே முதல் படமாகும்.இதற்கு முன் கன்னடத்தில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் முக்கிய வேடத்தில் பிரபல இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அறிமுகப் படத்திலிருந்து தொடர்ந்து இதுவரை காலமும் விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக ‘கோப்ரா’ உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகளும் கடந்த மாதம் முடிவுற்றது. இந்நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

தற்போது இப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் யாவும் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோப்ரா திரைப்படம் நடிக்க நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகைகளை விட அதிகமான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement