பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகராகத் திகழ்பவர் நடிகர் சல்மான்கான். இவரின் திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி திரைப்படங்கள் ஆகவே ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதன் காரணமாக இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து தற்போது இவர் டைகர் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக இவருடன் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.
ஏற்கெனவே சல்மான் கான் கத்ரீனாவை காதலித்தாக பல கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதனையடுத்து கத்ரீனா கைப் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் விக்கி கவுசல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதே நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றுள்ளார். அந்த சமயத்தில் விக்கி கவுசல் சல்மான் கானுடன் பேசமுயன்றார். ஆனால் சல்மான் கானோ கண்டும் காணாதது போல் சென்றுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கருத்துப் பதிவுகளின் மூலம் மோதிக்கொண்டனர். அதிலும் குறிப்பாக சல்மான் கானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்பை விக்கி கௌஷல் திருமணம் செய்திருப்பதால்தான் சல்மான் கான் அவரை மதிக்கவில்லை என்றும் ஒரு விமர்சனம் கூறப்பட்டது.
இவ்வாறாக இந்த விஷயம் ஆனது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் சர்ச்சையானதால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சல்மான் கான் விருது வழங்கும் விழாவில் விக்கி கெளஷலைக் கட்டிப்பிடித்து உரையாடினார்.
அதுமட்டுமல்லாது இப்பிரச்சினை குறித்து நடிகர் விக்கி கெளஷலும் விளக்கம் அளித்துள்ளார். அந்தவகையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல விஷயங்கள் பற்றித் தேவையில்லாத விவாதங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் வீடியோவில் தோன்றும் விஷயங்களில் உண்மை இருப்பதில்லை. அது பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை" என்று தெரிவித்தார்.
Listen News!