சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமி விருதுகள் வழங்கும் விழா வருடா வருடம் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான (IIFA 2022 ) இன் 22-ஆவது விருது வழங்கும் விழா அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள யாஸ் பே வாட்டர்ஃபிரண்டின் ஒரு பகுதியான எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நடிகர் சல்மான் கான், நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் முன்னின்று தொகுத்து வழங்கி இருந்தனர்.
IIFA விருதுகள் 2022 நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி ஆனது ஜூன் 25-ஆம் தேதி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் கலர்ஸ் தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சல்மான் கான் நடிகை சாரா அலி கானை மேடையில் வைத்துக் கலாய்த்திருக்கிறார்.
அதாவது மேடைக்கு வந்த சாரா அலி கான் சில பிராண்டுகளை விளம்பரம் செய்ய உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து "நான் சல்மான் அங்கிளுடன் சேர்ந்து சில பிராண்டுகளை அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்" என்று பார்வையாளர்களை பார்த்து கூறினார் நடிகை சாரா அலி கான்.
அதைக் கேட்ட சல்மான் கான் , "அங்கிளா, என்னை அங்கிள் என்று சொல்லுறியே, உன் படம் போச்சு' என்று சாரா அலி கானைக் கலாய்த்தார். அதற்கு உடனே சாரா "ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்" என்று கேட்டார். அதற்கு சல்மான் கான் "நீ எனக்கு ஜோடியாக நடித்திருக்கலாம். ஆனால் அனைவரின் முன்பும் என்னை அங்கிள் என்று அழைத்ததால் அந்த வாய்ப்பு போய்விட்டது" என்று கிண்டலாகப் பதிலளித்தார்.
ஆனால் சாராவோ "நீங்கள் தானே உங்களை அங்கிள் என அழைக்குமாறு கூறினீர்கள்" என்று பதில் அளித்தார். பாலிவுட்டுக்கு வரும் இளம் நடிகர்கள், நடிகைகள் எல்லோருமே நடிகர் சல்மான் கானை அங்கிள் என்று அழைக்காமல் மாறாக பாய் என்று தான் அழைக்கிறார்கள். சல்மானின் நண்பரான சயிஃப் அலி கானின் மகள் சாராவோ, சல்மானை அங்கிள் என்று அழைத்து விட்டார். இந்த சுவாரசியமான சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அவர்களின் ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளது.
பிற செய்திகள்
- நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
- அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
- எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!