• Sep 20 2024

57வயதிலும் இளமையாக இருக்கும் சல்மான் கான்... அவரின் அழகிற்கு காரணமே இவை தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சல்மான் கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சல்மான் கானுக்கு தற்போது 57 வயது ஆகின்றது. ஆனாலும் இன்றுவரை கட்டான உடலமைப்பில் அழகான தோற்றத்தோடு இருந்து வருகின்றார். 


இந்நிலையில் இவரின் உடல் ஆரோக்கியம் குறித்தான சில ரகசியங்களைப் பகிர்ந்திருக்கின்றார். அதாவது உறுதியான உடலமைப்பில் கம்பீரமாக தோற்றமளிக்கும் சல்மான் கானின் ஆரோக்கியத்தில் உணவும், அவர் அருந்தும் பானங்களும் தான் முக்கிய காரணமாக உள்ளனவாம்.


அதாவது நாள் முழுவதும் வேலை செய்ய அவருக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் காலை உணவுக்கு, அவர் புரதம் மிகுந்த முட்டையின் வெள்ளைக்கரு, குறைந்த கொழுப்புள்ள பால் எடுத்துக்கொள்கிறார். மேலும் தன்னை ஒரு உணவு பிரியர் என அடையாளப்படுத்தும் சல்மான் கான், நேர்காணல்களில் அதை ஒப்பு கொள்ளவும் செய்திருக்கிறார். 


அதுமட்டுமல்லாது இந்திய உணவுகளும், இத்தாலிய உணவுகளும் அவருக்கு மிகவும் விருப்பமானவைகள். அதிக இனிப்பு சேர்ந்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதைத் இவர் தவிர்த்து வருகிறார். 

மேலும் சல்மான் கான் தனது உடலின் வளர்சிதை மாற்றத்தினை (metabolism) நன்றாக வைத்திருக்க ஐந்து முதல் ஆறு தடவை முறையே சீரான இடைவெளியில் உணவை எடுத்துக் கொள்கிறார். அந்தவகையில் மதிய உணவாக ரொட்டியும் காய்கறிகளை ப்ரை செய்தும் உண்கிறார். கூடவே சாலட் எடுக்கிறார். சல்மான் கான் எப்பொழுதும் தனது தட்டை ஆரோக்கியமான உணவுகளால் மட்டுமே நிரப்பிக் கொள்கிறார். 

அத்தோடு மாலை நேர சிற்றுண்டிகளில் பாதாம் சாப்பிடுவது அவருக்கு பிடிக்குமாம். சில நேரங்களில் அவர் வேறு ஏதாவது ஆரோக்கியமான தின்பண்டங்களையும் உண்ண தவறுவதில்லையாம். அந்தவகையில் இரவு உணவிற்கு 2 முட்டை, மீன் அல்லது சிக்கன் மற்றும் சூப் ஆகியவற்றை எடுத்துக்கொள்வார். 

இது தவிர, சல்மான் தனது உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் முறையே ஒரு கிண்ணத்தில் பழங்கள் அல்லது புரோட்டீன் ஷேக்குகளை எடுத்துக்கொள்கிறார். உடற்பயிற்சிக்கு பிறகு ஆற்றலை அதிகரிக்க ஓட்ஸ் அல்லது புரோட்டீன் பார்ஸ் எடுத்து கொள்வாராம். இவைதானாம் சல்மான் கானின் அழகிய உடலமைக்கு முக்கிய காரணம்.

Advertisement

Advertisement