• Sep 21 2024

வெந்து தணிந்தது காடு மாப்ள பெண்ணுக்கு வணக்கத்தை போடு...வைரலாகும் புகழின் wedding Reception..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் புகழ்.இதற்கு முதல் பல காமெடி நிகழ்ச்சிகளில்  பெண் வேடம் அணிந்து காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியே இவருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த இவர் தற்பொழுது படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து வருகின்றார். அந்த வகையில் வலிமை, எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.




இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் இவர் ண்மையில் தனது நீண்ட நாள் காதலி பென்ஸ் ரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சூழ கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்தது.





இந்நிலையில் இவரின் wedding Reception க்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் கூல் சுரேஷ் செய்த விசயம் வைரலாகி வருகின்றது.




அதாவது மணப்பெண் மற்றும் மணமகனுடன் புகைப்படம் எடுக்கும் போது வெந்து தணிந்தது காடு மாப்ள பெண்ணுக்கு வணக்கத்தை போடு...என ஒரு போட்டில் எழுதி புகைப்படம் எடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement