• Nov 11 2024

'சாம் ஆன்ட்டி எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்'- சமந்தாவைப் பற்றி குறிப்பிட்ட மகேஷ்பாபுவின் மகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் சர்காரு வாரி பாட்டா என்னும் திரைப்படம் உருவாகி இன்றைய தினம் வெளியாகியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மகேஷ்பாபுவின் மகளான சித்தாரா பென்னி என்னும் பாடலுக்கு டாஸ்ன் ஆடியுள்ளார்.இதன் மூலம் அவர் பெரிய திரையில் அறிமுகமாகியிருக்கிறார். அத்தோடு இவருக்கு தற்பொழுது தான் 9 வயது என்பதும் முக்கியமாகும்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அப்பாவின் படத்தில் நடனமாடிய அனுபவம் குறித்து அண்மையில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது பென்னி பாடலுக்கு ஆடத் துவங்கியபோது பதட்டமாக இருந்ததாகவும், இரண்டு டேக் போன பிறகு சௌகரியமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தவிர சாம் ஆன்ட்டி எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் போன்றவர். நான் எப்பொழுது செட்டுக்கு சென்றாலும் என்னுடன் விளையாடுவார். அது ரொம்ப ஜாலியாக இருந்தது என்றார். மகேஷ் பாபுவின் தூக்குடு படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். அப்பொழுது தான் சமந்தாவுடன் சித்தாரா நேரம் செலவிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement