தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. அதாவது மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றார்.
இதன் காரணமாக சமந்தாவாழ் ஒப்பந்தமான விளம்பர படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதுமட்டுமல்லாது சில படங்களில் இருந்தும் விலகியதாக கூறப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் தனது நோய் பாதிப்புக்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்பிய சமந்தா, படப்பிடிப்புகள் மற்றும் படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும் சமந்தா இயக்குநர் ஷிவா நிர்வானா இயக்கத்தில் உருவாகும் 'குஷி' என்ற திரைப்படத்திலும் நடித்து வந்தார். இந்தப் படத்தில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எஞ்சியுள்ள படப்பிடிப்பு நடைபெறவிருந்த சந்தர்ப்பத்தில் தான் சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக குஷி படத்தினுடைய படப்பிடிப்பானது தடைப்பட்டு நடைபெறாமல் போனது. இந்நிலையில் சமந்தா சிகிச்சைக்கு பிறகு தற்போது உடல்நிலை சற்றுத் தேறியுள்ளார். இதனால் மீண்டும் முன்பு தான் கமிட்டாகியிருந்த படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமந்தா சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் பலரதும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அந்தவகையில் குஷி படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில் "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவர்கொண்டா மற்றும் ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது விஜய் தேவர்கொண்டாவின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்திருந்தார் சமந்தா.
We all await your return in full health and your big smile ❤️ https://t.co/kuSN1ZdGj3
இதனைத் தொடர்ந்து சமந்தாவின் இந்தப் பதிவை ஷேர் செய்துள்ள விஜய் தேவர்கொண்டா "நீங்கள் முழு ஆரோக்கியத்துடனும் பெரிய புன்னகையுடனும் மீண்டும் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று கூறிப் பதிவிட்டுள்ளார். அதனோடு இணைத்து ஹார்ட்டின் சிம்பளையும் ஷேர் செய்துள்ளார். இதனைப் பார்த்த சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
Listen News!