• Sep 20 2024

வெளிநாட்டில் அவசர அவசரமாக குத்துச்சண்டை மற்றும் கராத்தே பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்து ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகினார். இந்த தொடரில் பெண் போராளியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதுதவிர புஷ்பா படத்தில் ஊ சொல்லுறியா மாமா என்னும் பாடலுக்கு நடனமாடி வேற லெவலில் பேமஸ் ஆன இவர் தற்பொழுது குஷி ,சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் ஹிந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். 


இதில் ஹிந்தி நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த தொடரிலும் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் இருப்பதால் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளும்படி படக்குழுவினர் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து தற்காப்பு கலை பயிற்சியை தற்போது சமந்தா தொடங்கி இருக்கிறார்.

 அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரபல தற்காப்பு கலைஞர்கள் மும்பை வந்து சமந்தாவுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். குத்துச்சண்டை, கராத்தே உள்ளிட்ட பல சண்டை பயிற்சிகளை கற்று வருகிறார். பயிற்சி முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement