• Sep 20 2024

சமந்தா இன்னும் குணமடையவில்லை... அவருக்கு இந்த நோய் எல்லாம் இருக்கு... உண்மையை அரங்கத்தில் போட்டுடைத்த விஜய் தேவர்கொண்டா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஷிவா நிர்வாண இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் தற்போது 'குஷி' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இடம்பெற்றது. இதனையடுத்து பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஆலப்புழா போன்ற இடங்களில் நடைபெற்றது.


இருப்பினும் சமந்தாவின் உடல்நலக்குறைவால் இதன் ஷூட்டிங் தற்காலிகமாக இடையில் நின்றுபோனது. பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டு குணமான பின் சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்தவகையில் இப்படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான என் அஞ்சலி நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது. மேலும் காதலர்களுக்கு, குஷி படம் கண்டிப்பாக ரொமாண்டிக் சர்ப்ரைஸாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கபடுகிறது. 


அந்தவகையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் வீடியோவில் இடம்பெற்றிருந்த விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா இருவரினதும் காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தன. இப்படமானது  செப்டெம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்வுகள் அமோகமாக இடம்பெற்று வருகின்றன.


இந்நிலையில் தற்போது இடம்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்வொன்றில் விஜய் தேவர்கொண்டா சமந்தா குறித்துப் பல விடயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது "சமந்தா இந்தப் படத்திற்காக சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டார், இப்போதும் எனக்கு சமந்தா முழுமையாக குணமடையவில்லை எனத் தெரியும், லைட் பட்டால் கண் எரிச்சல், தலை வலி ஏற்படும், ஆனாலும் இந்த மேடையில் உங்களுக்காக இந்த மேடையில் நடனமாடி மகிழ்விக்கின்றார்" எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement