வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதுவரை தளபதி 67 அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து அடுத்தடுத்து சர்ப்ரைஸ் ட்ரீட் கிடைத்து வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு, அடுத்து காஷ்மீருக்கு சென்றுள்ளது. நேற்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு அப்டேட் கொடுத்து அசத்தியது தளபதி 67 டீம். அதன்படி இந்தப் படத்தில் கமிட்டான நடிகர்கள், நடிகைகளின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதேபோல் இன்று சமந்தாவும் தளபதி 67ல் இணைந்துள்ளதாக ஒரு போஸ்டர் வெளியானது.
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நேற்றே அப்டேட்கள் வெளியான நிலையில், சமந்தாவின் போஸ்டர் மட்டும் எப்படி இன்று வெளியிடப்பட்டது என கேள்வி எழுந்தது.நேற்று வெளியான போஸ்டர்களைப் போல இதுவும் சமந்தாவின் போட்டோவுடன் வைரலானது.
ஆனால் இது தவறான தகவல் எனவும், சமந்தா தளபதி 67ல் கமிட் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், படக்குழு தரப்பில் இருந்தோ, சமந்தாவோ இந்த போஸ்டரை வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.இதனால் இனிமேலும் சமந்தா தளபதி 67ல் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.
Listen News!