• Nov 17 2024

பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாகசைத்தன்யாவால் கடும் கோபத்துக்குள்ளான சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் தான் நாகசைத்தன்யா. இவர் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களிலும் தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசகர் பட்டாளமும் உள்ளது.

இவர் கடந்த 2017ம் ஆண்டு முன்னணி நடிகையான சமந்தாவைத் திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த 2021ம் ஆம் ஆண்டு அறிவித்திருந்தனர். அதன்படி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கெரியரில் இருவரும் கவனம் செலுத்தி வரும் நிலையில் நாகசைத்தன்யா தெலுங்கு நடிகை ஷோபிதா என்பவரை தற்போது காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஜோடியாக டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இது சமந்தா தரப்பில் இருந்து பரப்பப்பட்ட செய்தி என்றும், நாக சைதன்யாவின் புகழுக்கு தீங்கு ஏற்படுத்த அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த சமந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக பதிவிட்டுள்ளதாவது “பெண்ணைப் பற்றிய வதந்திகள் எல்லாம் உண்மையாகவே இருக்கும். ஆணைப் பற்றிய வதந்திகளை பெண் தான் பரப்புகிறாள். என்னது இதெல்லாம். சம்பந்தப்பட்ட நாங்களே இதில் இருந்து கடந்து சென்றுவிட்டோம். நீங்களும் அதை செய்ய வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை பாருங்கள்” என கூறியுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, இதுபோன்ற வதந்திகளுக்கு பதிலளிக்காமல் அவற்றை தவிர்த்து விடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement