திடீர் உடல்நலக்குறைவுவால் சிகிச்சை பெற்று வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனினும் இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்ததாக சமீபத்தில் யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் சொல்லி கண்கலங்கினார்.
மேலும் அப்படத்தின் டப்பிங்கை கூட அவர் மருத்துவமனையில் இருந்தபடி செய்த புகைப்படங்கள் வெளியாகியது.இதனிடையே நேற்று நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவர் நலம்பெற வேண்டி ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது சமந்தா நன்றாக தனது வீட்டில் ஒய்வு எடுத்து வருவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி வெரும் வதந்தி தான் என்றும் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Listen News!