தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். இவர் நடிப்பில் தற்போது குஷி திரைப்படம் தயாராகி வருகிறது. இதுதவிர சிட்டாடெல் என்கிற இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார் சமந்தா.
ராஜ் மற்றும் டீகே இயக்க உள்ள இந்த வெப் தொடரில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சிட்டாடெல் வெப் தொடர் நிகழ்ச்சியிலும் சமந்தா கலந்துகொண்டார்.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை சமந்தா குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் அதிரடி கருத்துக்களை தெரிவித்து இருந்தார். நடிகை சமந்தா நட்சத்திர அந்தஸ்த்தை இழந்துவிட்டதாகவும், அவரின் சினிமா கெரியர் முடிந்துவிட்டதாகவும் கூறிய அவர், சமந்தா அழுதே அனுதாபம் தேடுவதாகவும் சாடி இருந்தார்.
இதற்கு சமந்தா காதுகளில் எப்படி முடி வளரும் என கூகுள் தேடி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். முதலில் இது எதற்காக என தெரியாமல் இருந்த ரசிகர்கள், தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காதில் அதிகளவில் முடி இருப்பதை விமர்சிக்கும் விதமாக தான் சமந்தா இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பதை புரிந்துகொண்டனர்,
இப்படியான நிலையில் சமந்தா ஹைதராபாத் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!