தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். மேலும் சமந்தா நாக சைதன்யா திருமணம், நாகசைதன்யா குடும்ப வழக்கப்படி ஹிந்து முறை படியும், சமந்தாவின் குடும்ப வழக்கத்தின்படி கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர், தொடர்ந்து நடிகை சமந்தா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற பிரபலங்கள் பார்த்து பொறாமைப்படும் விதமாக, குடும்பம் கணவர் என அனைவரையும் அனுசரித்து சென்றார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, இவர்கள் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
பிரிந்த பிறகு இருவரும் தமது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சமந்தா விஜய தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.
Listen News!