• Nov 19 2024

நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர் தான்... கூறிய சமந்தா... காரணம் என்ன..? வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. பல படங்களிலும் சிறப்பாக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற இவர் நடிப்பில் தற்போது 'யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ்' ஆகியபோன்ற பல திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. 

இப்படங்களிலே 'யசோதா, சகுந்தலம்' ஆகிய இரு படங்களினதும் ஷூட்டிங்  முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. அதுமட்டுமல்லாது தெலுங்கில் உருவாகும் 'குஷி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தினை படத்தை ஷிவ நிர்வாணா என்பவர் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. 

'குஷி'  படத்தின் ஷூட்டிங் நிகழ்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய உள்ளனர். படங்களில் மட்டுமல்லாது இந்தியில் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் சமந்தா.


இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக ஒரு சில பட வாய்ப்புகளை இழக்கவும் செய்துள்ளார். இதற்கு காரணம் அவர் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியது தான் என கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஒரே மாதத்தில் தமிழில் ஒரு படத்தில் இருந்தும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகியுள்ளார் சமந்தா.

இவ்வாறாக திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்து வருகின்ற சமந்தா தான் மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ள சமந்தா, அவரின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது மற்றொரு பேட்டியிலும் தான் மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள சமந்தா, அவர் தலைமையில் நம் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறியிருகின்றார். மேலும் "அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வார்" என நம்புவதாகவும் அந்த பேட்டியில் மிகவும் உறுதியாக சமந்தா தெரிவித்துள்ளார். 


மோடி பற்றி இவ்வாறு ஓப்பனாக பேசிய சமாந்தாவுக்கு ஒரு பக்கம் பாரட்டுக்கள் கிடைத்தாலும், மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement

Advertisement