ஷிவா நிர்வாண இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் தற்போது 'குஷி' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இடம்பெற்றது. இதனையடுத்து பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஆலப்புழா போன்ற இடங்களில் நடைபெற்றது.
இருப்பினும் சமந்தாவின் உடல்நலக்குறைவால் இதன் ஷூட்டிங் தற்காலிகமாக இடையில் நின்றுபோனது. பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டு குணமான பின் சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்தவகையில் இப்படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான என் அஞ்சலி நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது. மேலும் காதலர்களுக்கு, குஷி படம் கண்டிப்பாக ரொமாண்டிக் சர்ப்ரைஸாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கபடுகிறது.
அந்தவகையில் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் உடைய ட்ரெய்லர் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கங்களில் தற்போது பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், விஜய் தேவரகொண்டா கையில் சிகரெட் வைத்திருப்பது போலவும், அவர் மடியில் சமந்தா அமர்ந்திருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Listen News!