கோலிவுட்டில் இன்று வரை ஒரு கனவுக்கன்னியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமண பிரச்சினைகளுக்கு பிறகுதான் ஒரு சரியான கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார். ஒரு முன்னனி நடிகையாக இருந்த எவரும் ஐட்டம் சாங்கில் ஆட தயங்குவார்கள்.
ஆனால் சமந்தா அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எதை செய்தால் நமக்கு நல்லது என யோசித்து செயல்பட்டு வருகிறார்.எதையும் துணிச்சலாக கையாளும் சமந்தா சமீபத்தில் குஷி பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா , சமந்தா நடிப்பில் தயாராகி வரும் குஷி படம் ஒரு பான் இந்திய படமாக தயாராகியிருக்கிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற குஷி பட ப்ரமோஷனில் சமந்தா கலந்து கொண்டிருக்கும் போது பாடகி ஒருவர் சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவரான நாகசைத்தன்யா இணைந்து நடித்த மஜினி திரைப்படத்தின் Priyathama பாடலை பாடியிருக்கின்றார்.
இதைக் கேட்ட சமந்தா அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்திருக்கின்றார். இதனால் இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா இன்னும் நாகசைத்தன்யாவை மறக்கவில்லை என்று கூறி வருகின்றனர். அத்தோடு இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!