• Nov 11 2024

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இந்த உணவை எல்லாம் சாப்பிடுவதில்லையா?- பிடிச்ச சாப்பாடே இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

 பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

தொடர்ந்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் சமீபகாலமாக அவர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


இதனால் சிகிச்சை எடுத்து வந்தும் முழுமையாக குணமடையவில்லை. இதையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக சென்று இருக்கிறார், படங்களில் நடிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.உடல்நிலை பாதிப்பு காரணமாக உணவு பழக்க வழக்கங்களை சமந்தா முழுமையாக மாற்றி இருக்கிறார்.


 விரும்பி சாப்பிட்டு வந்த உணவு வகைகளை நிறுத்தி உள்ளார்.குறிப்பாக நோயை தீவிரப்படுத்தும் உணவு வகைகளான நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகள், பால், பிரெட் உள்ளிட்ட உணவுகளை முழுமையாக தவிர்த்து விட்டார்.இந்த நிலையில் தற்போது ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு தனக்கு விருப்பான பிரெட்டை பட்டருடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.      

Advertisement

Advertisement