• Sep 21 2024

4 டிகிரி குளிர்ந்த நீரில் குளித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த சமந்தா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. இவர் கடந்த ஆண்டு கையில் டிரிப்ஸ் ஏற்றியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் தான் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நோயால் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சிகிச்சை எடுத்து தற்பொழுது அதிலிருந்து குணமடைந்த இவர் சகுந்தலம்,யசோதா, ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் இரண்டும் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


இதனை அடுத்து விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இது தவிர சில்லாட்டல் என்னும் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கும் சமந்தா ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றார்.

தற்போது சமந்தா 4 டிகிரி குளிர்ந்த நீரில் குளித்து இருக்கிறார். அவர் 6 நிமிடம் ஐஸ் பாத் எடுக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement