தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிகளவில் கொண்டாடும் பிரபல நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் படங்களில் மட்டுமன்றி பல விளம்பரப் படங்களிலும் சிறப்பாக நடித்து வருகின்றார். நடிகை சமந்தா படம் நடித்தாலும் சரி, விளம்பரங்கள், போட்டோஷுட் என எது செய்தாலும் சரி அது அவரின் ரசிகர்களின் மத்தியில் பயங்கர வைரலாகிவிடும்.
இந்தநிலையில் இவர் தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றினை நடித்து வருகின்றார். அப்படத்திற்கு 'குஷி' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்ற நடிகை சமந்தா தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அதாவது நடிகர் வருண் தவாவுடன் இணைந்து புதிய ஹிந்தி படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் உடைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகரான அயுஷ்மன் குரானாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப்படம் ஆனது காமெடி கதைக்களத்தை மையமாக கொண்டது எனவும், இதன் படப்பிடிப்புக்கள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இதனைக் கேள்விப்பட்ட சமந்தா ரசிகர்கள் அடடே நம்ம தலைவி பாலிவுட்டிலும் கலக்கிட்டு இருக்காங்களே என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.
பிற செய்திகள்
- கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்; ஜொள்ளுவிடும் ரசிகர்கள்
- தேசப்பற்று இல்லாதவருக்கு இந்தியாவில் என்ன வேலை; சூர்யாவை கண்டித்த காயத்ரி
- தனது பிறந்த நாளில் மகிழ்ச்சிச் செய்தியை வெளியிடவுள்ள நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா- குட் நியூஸ் ஆக இருக்கே
- ராம்சரண் பட டைட்டிலை களவாடிய சிவகார்த்திகேயன் படக்குழு- வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்
- சூர்யா மற்றும் கார்த்தியின் பூர்வீக வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா? – அட இவ்வளவு அழகாக பராமரிக்கின்றார்களா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!