• Sep 20 2024

ஆயுர் வேத சிகிச்சை பெற்று வரும் சமந்தா- இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?- ஹெல்த் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் யசோதா என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது.இதனை அடுத்து குஷி சகுந்தலம் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றார்.

மேலும் சமீபத்தில் சமந்தா தான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். இந்த நோயலிருந்து குணமாக முறையான சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.


 யசோதா  படத்தின் ப்ரமோஷனில் கலந்துக்கொண்ட சமந்தா உடல் நிலை குறித்து பேசியபோது கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும் சமந்தா உள்ளூர் மருத்துவர்களால் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்த ஆயுர்வேத சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சையால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement