மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் சமந்தா. மேல் சிகிச்சை பெறவும், சற்று ஓய்வு எடுத்து உடல் நலனில் கவனம் செலுத்தவும் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.அவர் ஓராண்டு காலம் பிரேக் எடுப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ஓராண்டு அல்ல 6 மாதங்கள் பிரேக் எடுத்துள்ளார்.
பிரேக் எடுத்த கையோடு உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்ய கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் சமந்தா.தான் கோவில்களுக்கு செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் சமந்தாவுக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. அதாவது இவர் படம் ஒன்றுக்கு ரூ. 4 கோடி வாங்குகிறாராம். பிரேக் எடுப்பதற்கு முன்பு 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால் உடல்நலம் தான் முக்கியம் என அந்த படங்களில் இருந்து விலகிவிட்டாராம்.
மேலும் வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அந்த 3 படங்களில் நடிக்க மறுத்ததன் மூலம் அவருக்கு ரூ. 12 கோடி இழப்பாம் என்றும் புதிய தகவல் வெளியாகி வருகின்றது.
இது ஒரு புறம் இருக்க சமந்தா முடியை குறைத்து டாம் பாய் லுக்கில் மாறி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவுக்கு ஹன்சிகா பியூட்டி என கமெண்ட் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!