• Sep 20 2024

ஒரு வருடம் படம் நடிக்காவிட்டால் சமந்தாவுக்கு இத்தனை கோடி இழப்பு ஏற்படுமா?- சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.பான் இந்திய நடிகையாக வலம் வரும் இவர் விஜய்தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தை நடித்து முடித்துள்ளார்.இதையடுத்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரிலும் நடித்துள்ளார்

இந்தத் தொடரையும் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். இதன் சூட்டிங்கை முடித்துள்ள சமந்தா நடிப்பிலிருந்து சில காலம் பிரேக் எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.முதலில் ஒரு ஆண்டுகாலம் இந்த ஓய்வு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 6 மாத காலம் என்று கூறப்படுகிறது. 


இந்த காலகட்டத்தில் அமெரிக்கா செல்லவுள்ள சமந்தா, தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கவுள்ளார். தற்போது கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இந்த ஓய்வு காலத்தில் சமந்தா ஆன்மீகம் உள்ளிட்ட வழிகளில் தன்னுடைய மனதை செம்மைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். 


இந்நிலையில் இந்த ஒரு வருடத்தில் படங்களில் நடிக்காததால் சமந்தாவிற்கு 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் நடிக்க சமந்தா 3.5 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இதையடுத்து அவருக்கு அடுத்த ஒரு ஆண்டில் ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement