• Nov 14 2024

எனக்கென்ன வயசாகிடுச்சா..அந்த நடிகையிடம் அப்படியொரு கேள்வி கேட்ட சமந்தாவின் முன்னாள் கணவர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவர் பற்றி இணையத்தளங்களில் பல கிசுகிசுக்கள் எழுதப்பட்டு வருகின்றது.நடிகை சமந்தா தனது கணவனை பிரிந்தன் பிற்பாடு தனது வேலையில் பிஸியாக உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில்  நாக சைதன்யா விவாகரத்துக்கு பிறகு மற்றொரு நடிகையை காதலித்து வருகிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதை அவர்கள் அதுபற்றி வாய்திறக்கவில்லை.

மறுபுறம் நாக சைதன்யா படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எனினும் அவர் தற்போது நடித்து வரும் NC 22 படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி ட்விட்டரில் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார். அதில் மரியாதைக்காக அவர் காரு என குறிப்பிட்டு இருந்தார்.

அதற்க்கு பதில் அளித்த நாக சைதன்யா 'எதற்காக காரு என சேர்க்குறீங்க, எனக்கென்ன வயசாகிடுச்சுனு நினைக்கிறீங்களா' என கேட்டிருக்கிறார்.

எனினும் இதற்காக நாக சைதன்யாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவரை uncle என குறிப்பிட்டு எல்லோரும் ட்ரோல் செய்திருக்கிறார்கள்.  



Advertisement

Advertisement