யசோதா படத்தினைத் தொடர்ந்து தற்போது சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது. அதாவது காளிதாஸ் இயற்றிய சாகுந்தலம் என்ற புராண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக, சமந்தாவும் சுஃபியும் சுஜாதாயும் புகழ் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
மேலும் சிறுவயதிலேயே டிஸ்னியில் வரும் இராஜாகுமாரி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட சமந்தாவின் ஆசை சாகுந்தலம் படம் மூலம் நிறைவேறியுள்ளது. அத்தோடு இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹாவும் நடித்துள்ளார்.
அந்தவகையில் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. இருப்பினும் சாகுந்தலம் ரிலீஸையொட்டி சமந்தா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் தற்போது தனக்கு உடல்நலம் சரியில்லை என சமந்தா ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாவமே இவருக்கு என்ன ஆச்சு எனக் கேட்டு கவலையில் உள்ளனர்.
Listen News!