தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக, பல மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். தற்பொழுது அதிலிருந்து மீண்டு வந்ததோடு படப்பிடிப்புக்களிலும் கலந்து கொண்டு வருகின்றார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் யசோதா.கதாநாயகியை மையமாக வைத்து உருவாகிய இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.கடுமையான உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் போதும், சமந்தா தன்னுடைய படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தது திரை உலகினரை ஆச்சரியப்பட செய்தது.
மேலும் சமீப காலமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்த சமந்தா, தற்போது தன்னுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளார். எனவே கடந்த மாதம் முதல், மீண்டும் தன்னுடைய சூட்டிங் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது சமந்தா நடிகர் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் படப்பிடிப்பிலும், ஹிந்தியில் வருண் தவானுடன் நடிக்க உள்ள 'சீட்டால வெப் தொடரிலும் நடிக்க ஆயத்தமாகி உள்ளார்.
எனவே தன்னுடைய உடலில் பழைய வலுவை கொண்டு வருவதற்காக மீண்டும் உடற்பயிற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தன்னுடைய பயிற்சியாளர் உடன் சமந்தா, ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பலர் சமந்தாவின் இந்த கடின உழைப்பும், முயற்சியும் தான் அவரை மிக விரைவில் குணப்படுத்தியுள்ளது என அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!