• Sep 20 2024

விஜய் டிவி பிரபலத்தோடு நெருக்கமாக புகைப்படம் எடுத்த சமந்தா.. பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. இவரின் நடிப்பிற்கும், அழகிற்கும் என்றே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'யசோதா' திரைப்படமானது வெற்றிபெற்றுள்ளது.


இப்படத்தை தொடர்ந்து 'சகுந்தலம், குஷி' ஆகிய படங்கள் சமந்தாவின் கைவசம் உள்ளன. இருப்பினும் தற்போது மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. விரைவில் அவர் குணமடைந்து பழையபடி மாறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


இந்நிலையில் சமந்தாவின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்திருக்கின்றது. அதாவது சமந்தா சினிமா படங்களில் நடிக்க வருவதற்கு முன் நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இந்த விளம்பரத்தில் சமந்தாவுடன் இணைந்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான ரம்யாவுடன் நடித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது அப்போதிலிருந்தே நானும் சமந்தாவும் நல்ல நண்பர்கள் என்று ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement