• Nov 17 2024

பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் இவ்வளவு தான் வசூலா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை சமந்தா, மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அத்தோடு அவர் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை அள்ளி வெற்றிவாகை சூடியது. இதையடுத்து அவர் நடித்த திரைப்படம் தான் சாகுந்தலம். இப்படத்தின் ரிலீசும் பல மாதங்களாக தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இவ்வாறுஇருக்கையில், இறுதியாக இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் ஆனது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருந்த சாகுந்தலம் திரைப்படத்தை குணசேகரன் இயக்கி இருந்தார். நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்தை தில் ராஜு வெளியிட்டு உள்ளார்.

சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருந்தார். அத்தோடு இதுதவிர அருவி பட ஹீரோயின் அதிதி பாலன் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். சாகுந்தலம் படத்தின் ரிலீசுக்கு முன் நடிகை சமந்தா இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இப்படத்தை புரமோட் செய்ததால் இப்படத்தின் மீது எதிர்பாப்பும் அதிகரித்து இருந்தது.

மேலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் சொதப்பலான திரைக்கதையின் காரணமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இப்படத்தின் வசூலும் செம்ம அடி வாங்கியது. முதல் நாளில் ரூ.5 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் அதில் 50 சதவீதம் கூட வசூலிக்கவில்லை. அத்தோடு 2-ம் நாளில் இப்படம் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. இதேநிலை நீடித்தால் இப்படம் படுதோல்வியை சந்திக்கும் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement