தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகும் படங்களை அனைத்துமே மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்ற வண்ணமே இருக்கின்றன.
எப்போதும் சினிமா வேலைகளில் படுபிஸியாக இருந்து வந்த சமந்தா சமீபத்தில் அரியவகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இருப்பினும் இவர் அதிலிருந்து சற்றுக் குணமடைந்து விட்டார்.
இந்நிலையில் சமந்தா நடிப்பில் நேற்றைய தினம் 'யசோதா' திரைப்படம் ஆனது வெளியாகி இருந்தது. இப்படம் ஆனது ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் சமந்தாவோடு இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஆனது தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படமானது மர்மம், த்ரில், ஆக்ஷன் காட்சிகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பான கதை கொண்டு சுவாரசியமாக நகர்கிறது.
அத்தோடு முதல் பாதியில் மெதுவாக செல்லும் இந்த கதையானது இரண்டாம் பாதியில் வேகமெடுத்து ஷீட்டின் நுனியில் இருந்து ரசிகர்களை பார்க்க வைக்கின்றது. இந்நிலையில் இப்படத்தினுடைய முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கின்றது.
அதாவது உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான யசோதா திரைப்படம் ஆனது தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முதல் நாளில் மட்டும் 3.20 கோடியை வசூலித்துள்ளது.
மேலும் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் இப்படம் வரும் வாரங்களில் வசூலை வாரிக் குவிக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
Listen News!