• Sep 20 2024

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிஸ்கட் ஊட்டி விளையாடிய மணிமேகலை- அலப்பறை தாங்க முடியலையே சாமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் தான் மணிமேகலை. இந்த சேனல் மூலம் ரசிகர்களால் கவரப்பட்ட இவர் நடன இயக்குநர் உசைன் என்பவரைத் திருமணம் செய்ததால் சின்னத்திரையில் இருந்து விலகினார்.பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வருகின்றார்.

மேலும் இவர் இந்த நிகழ்ச்சியைத் தவிர குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபற்றி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் இவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பதும் முக்கியமாகும்.விதவிதமாக கெட்டப் போட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் மணிமேகலைக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது என்றும் சொல்லலாம்.

மணிமேகலை இன்று நடந்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் ஒரு குதிரைக்கு பிஸ்கெட் ஊட்டி விட்டிருக்கிறார்.


அந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறது, அதற்கு வாழ்த்தி சொல்லி இதை அவர் செய்திருக்கிறார்.இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement