நடிகர் சமுத்திரக்கனியின் "ரைட்டர்" திரைப்படத்தின் ப்ரெஸ் மீட் நிகழ்வில் சமுத்திரக்கனி கலந்துகொண்டு இவ்வாறு பேசி இருந்தார் 'இது ஒரு அற்புதமான தருணம், நல்ல படைப்பு தயாரிப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார்.
மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் ரொம்ப நன்றி. தம்பி ரஞ்சித் அவர்கள் பலபேருக்கு தாய், எனக்கும் தான் என்று கூறினார். அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணும்போது நான் ஒரு கட்டிடத்தில் உடைந்து அழவேண்டும், அந்த கதையை ரஞ்சித் சொல்லும்போதே எனக்கு கண்ணால் கண்ணீர் வந்து விட்டது.
அந்த ஷூட் எடுத்து முடித்த பின்னரும் நான் அதற்குள் இருந்து வெளியில் வரவே முடியாமல் அழுதுகொண்டே இருந்தேன். ஒரு குழந்தையை ஒரு தாய் இழுத்து வைத்து கண்ணீரை துடைத்து விடுவது போல என் கண்ணீரை துடைத்து விட்டான் என் தம்பி.
ஐ லவ் யூ டா தம்பி, இன்னும் நிறைய படைப்புகள் செய்வான். என்னை 8 மணிக்கு வர சொன்னால் நான் 7 மணிக்கெல்லாம் போயிருவேன், ஏனென்றால் அவர்கள் வேலை செய்வதை பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கும். இப்பிடி உழைக்கிற பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கும்.
கன்னட படம் ஒன்று நான் பண்ணும்போது மழை வந்து விட்டது, மேட்டில் ஒரு பாடல் காட்சி எடுப்பதற்காக அந்த குழுவே சேர்ந்து துப்பரவு செய்தார்கள். அப்படி ஒரு கூட்டு முயற்சி இந்த படத்தில் நான் பார்த்தேன் என்று பெருமை படுத்தினார்.
Listen News!