• Sep 20 2024

இந்த வாரத்துடன் முடிவடையும் சன்டிவியின் முக்கிய சீரியல்- கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த பல வருடங்களாக சூப்பர் ஹிட் சீரியல்களைத் தொகுத்து வழங்குவதில் சன்டிவியும் முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் ஆரம்பத்தில் ஒளிபரப்பாகிய மெட்டி ஒலி ,திருமதி செல்வம், தெய்வ மகள் ,நாதஸ்வரம், சித்தி, கோலங்கள் ,அத்திபூக்கள் போன்ற சீரியல்களை தற்பொழுதும் மக்கள் மறக்கவில்லை.

அதே போல தற்போதைய இளம் ரசிகர்களைக் கவரும் விதமாக ரோஜா, பூவே உனக்காக, கயல், வானத்தை போல, சுந்தரி அருவி கண்ணான கண்ணே போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த தொடர்கள் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெற்று . TRPயிலும் டாப்பில் உள்ளது. மேலும் சன்டிவியில் புத்தம் புதிய தொடர்கள் வர வர ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத தொடர்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

அப்படி இந்த வார இறுதியில் அதாவது ஜுன் 18ம் தேதி சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பூவே உனக்காக என்ற தொடர் முடிவுக்கு வருகிறதாம்.இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement