• Nov 10 2024

லியோ படத்தின் LCU அப்டேட் சொன்ன சாண்டி மாஸ்டர்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான டைட்டில் ப்ரமோ வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அறிவிக்கப்பட்டனர்.

படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் த்ரிஷா. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் என படத்தின் நடிகர், நடிகைகளின் பட்டியல் அதிரடியாக அமைந்துள்ளது. தொடர்ந்து கடந்த வாரத்தில் படக்குழுவினர் சூட்டிங்கிற்காக தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து காஷ்மீரில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனிடையே படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துக் கொள்ளுமாறும், படம் அதைவிட அதிகமாக கொடுக்கும் என்றும் படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லியோ படம் தரமா இருக்கும் நல்லா இருக்கும் என்று படத்தில் நடித்துவரும் சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் LCUவில் அமையுமா என்பது குறித்து தனக்கு இன்னும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்றும் விரைவில் இதன் அப்டேட் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது லியோ படம். படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸாக வெயிட் செய்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் அறிவிப்பு மட்டுமில்லாமல், அடுத்தடுத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அப்டேட் கொடுத்தது படக்குழு.

இந்நிலையில் படத்தின் சூட்டிங்கும் விறுவிறுப்பாக காஷ்மீரில் மிகுந்த கடுங்குளிருக்கிடையில் நடைபெற்று வருகிறது. விக்ரம் படத்தில் காஷ்மீர் குறித்த சில வசனங்கள் வரும். அதன் தொடர்ச்சியாகவே தற்போது லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விரைவில் LCU குறித்த அப்டேட்டை லோகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம் எனப்து குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement