• Sep 21 2024

“பத்தல பத்தல“ பாடலுக்கு மச்சினிச்சியுடன் நடனமாடிய சாண்டி மாஸ்டர்- நீங்க வேற லெவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்துள்ளார்.

அந்த வகையில் அனிரூத் இசையில் உருவாகிய பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமாகி வருகின்றது. இப்பாடலுக்கு கமல்ஹாசனும் வேற லெவலில் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் பத்தல பத்தல பாடலுக்கு கமலுக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்த சாண்டி மாஸ்டர் தன் மச்சினி சிந்தியாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார். பத்தல பத்தலனு அவர்கள் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் சிந்தியா.

இந்த வீடியோ ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது. மேலும் சாண்டி தனது மனைவியுடன் சேர்ந்து ஆடும் வீடியோக்களையும் எப்போதும் பதிவிட்டு வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement