சூர்யா மேற்றும் ஜோதிகா இணைந்து நடத்தி வரும் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய இப்படம் தான் 'விருமன்'. இப்படத்தை கொம்பன் பட இயக்குநரான முத்தையா இயக்கியிருந்தார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்திருந்தார்.
கிராமத்து பின்னணியில் குடும்பப் படமாக வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு நேற்று சக்சஸ் மீட் நடத்தியது.
நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே @iamSandy_Off master, மன்னிக்கவேமாட்டேன். Never done these acrobats before 😊
இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் @thisisysr 🔥https://t.co/TmZ3COwPPl#வானம்_கிடுகிடுங்க video song.
இதனிடையே 'விருமன்' படத்தின் 'வானம் கிடுகிடுங்க' வீடியோ பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இப்பாடலை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். மன்னிக்கவேமாட்டேன். இதற்கு முன்பு இது போல் நான் செய்ததில்லை. இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!