90களில் பிரபல்யமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சங்கவி. இவர் தல அஜித் நடிப்பில் வெளியான அமாரவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் இவரை சிறந்த நடிகை என அறிமுகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் சேர்ந்து ரசிகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய்யின் விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனால் விஜய் மற்றும் சங்கவிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அத்தோடு இவர் தமிழில் மட்டும் நடிக்காது தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார்.
சங்கவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் கொளஞ்சி. ஐ.டி. துறையில் வேலை செய்யும் வெங்கடேஷ் என்பவருக்கும், சங்கவிக்கும் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சங்கவி.
இவ்வாறு திருமண வாழ்க்ககைக்குள் சென்ற பின்னர் நடிப்பதில் முற்றுமுழுதாக விலகி விட்டார் சங்கவி.இவ்வாறு இருக்கையில் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!