• Nov 10 2024

எம்.ஜி.ஆர் ஆக விஜய்... ஜெயலலிதாவாக சங்கீதா.. தளபதி ரசிகர்களின் அலப்பறை.. வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவினுடைய தளபதி என்றால் அது நம்ம விஜய் தான். இவரின் படத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அதுமட்டுமல்லாது விஜய் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கு அவரின் ரசிகர்கள் கட்டவுட் வைத்துப் பால் ஊற்றி பிரமாண்டமாக கொண்டாடுவது வழமை. 


அந்தவகையில் தற்போது இவர் தெலுங்கு சினிமா பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைகின்றார். வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக இந்தப்படம் வெளியாக இருக்கின்றது.

படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய் அடிக்கடி தன்னுடைய படங்களிலும், இசை வெளியிட்டு விழாக்களிலும் அரசியல் பேசி வருகிறார். 


இதன்காரணமாகவோ தெரியவில்லை, அவருடைய ரசிகர்கள், விஜய்யின் பெயர் மற்றும் புகைப்படங்களை குறிப்பிட்டு அரசியல் சம்மந்தமான போஸ்டர்களை அடித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர்-ஆக விஜய்யையும், ஜெயலலிதாவாக சங்கீதாவையும் வைத்து போஸ்டர் ஒன்றை விஜய் ரசிகர்கள் அடித்துள்ளனர். இது பழைய புகைப்படமாக இருந்தாலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement