• Sep 20 2024

தனது மனைவிக்கு கியூட்டாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து கூறிய சஞ்சீவ்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் பல பிரபலங்கள் சீரியல்களில் மட்டுமல்லாது நிழ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

அப்படி ராஜா ராணி என்னும் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் திருமண வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்தவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

இவர்களில் சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். ஆல்யா விஜய்டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார். இருப்பினும் இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் அண்மையில் சீரியலில் இருந்து விலகினார்.

அந்த வகையில் இன்று ஆல்யா மானசாவிற்கு பிறந்தநாள், அத்தோடு இருவரின் திருமண நாள் இன்று தான். எனவே அவர்கள் சுற்றுலா சென்று தங்களது சந்தோஷமான நாளை கொண்டாடி வருகிறார்கள்.

சஞ்சீவ் தனது மனைவிக்கு கியூட்டாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து கூறும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement