இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கி வந்தாலும் , இவரின் படங்களில் மது, போதை பொருள், புகை பிடிப்பது போன்ற காட்சிகள் எல்லையை மீறி வைக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ற போல், இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களும் போதை பொருள் மற்றும் மது குடிப்பது போன்ற காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுருந்தது.
சமீபத்தில் 'லியோ' படத்தில் இருந்து, வெளியான நா ரெடி பாடலும் புகை மற்றும் மது சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகி வருகிற இந்த திரைப்படம், வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
"அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருப்பதாகவும், இது ஒரு வித்தியாசமான பேய் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும் என்றும் அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படம் வெளிவர இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் டிடி ரிட்டன்ஸ் குறித்து பேச வந்ததாகவும் இது தொடர்பாக நான் பதில் அளித்தால் காலையிலேயே நான் சரக்கு போட்டு வந்ததாக மக்கள் நினைப்பார்கள் எனவும் சிரித்துக் கொண்டே பதில் அளித்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றார்.
Listen News!