தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற திரைப்படத்தை தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என ரீமேக் செய்துள்ளனர். சந்தானம் நடித்துள்ள அந்த திரைப்படத்தை மனோஜ் பீதா என்பவர் தயாரித்து, இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சந்தானம், நடிகை ரியா சுமன், இயக்குநர் மனோஜ் பீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இயக்கநனர், இந்த திரைப்படத்தில் சந்தானம் நகைச்சுவை ஃபார்முலாவை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறினார்.
மேலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை விடாப்படியாக இருந்து சாதித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும் சந்தானம் பேசும் போது மக்கள் எப்போதுமே நல்ல படங்களையே வரவேற்கின்றார்கள். அது அப்போ இருந்து இப்ப வரைக்கும் நடந்திட்டு வருது.
புதுசா வருகின்ற கதைகளைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறாங்க.அப்ப வராவிட்டால் முதல் கொஞ்சம் துப்பினாங்க. இப்போ சோஷியல் மீடியா வந்ததால் நேரடியாகவே துப்பிறாங்க என கூலாக பதில் கூறியுள்ளார். மேலும் கண்ணாயிரம் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருப்பதாகவும் பேசினார்.
அதேபோல் சீரியசான திரைப்படங்களில் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, அடுத்து சீரியஸான படங்களை தவிர்த்துவிட்டு, தன்னுடைய ஃபார்முலாவில் நான்கு படங்கள் நடிக்க உள்ளதாக கூறினார். அதன் பிறகு மீண்டும் சீரியசான படங்களில் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
Listen News!