• Sep 20 2024

'கேன்ஸ்' திரைப்பட விழாவிற்கு முத்துப் போல் ஜொலிக்கும் ஆடையில் வந்த சாரா அலிகான்... வைரல் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாரா அலி கான். இவர் ஒரு வாரிசு நடிகையும் கூட. அதாவது இவர் நடிகர் சைஃப் அலி கான் என்பவரின் மகள் ஆவார். மேலும் சாரா அலி கான் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேதர்நாத்' திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமானாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக கொடி கட்டிப் பறந்து வருகின்ற சாரா அலி கான் தொடர்ந்தும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் டென் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.


மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான 'அத்ராகி ரே' என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக சாரா அலி கான் தான் நடித்து அசத்தி இருந்தார்.


இந்நிலையில் இவர் தற்போது உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முத்துப் போன்று ஜொலிக்கும் வெண்ணிற உடையில் பங்கேற்றிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement