பாலிவுட் திரையுலகின் டாப் நடிகைகளில் ஒருவரான சாரா அலி கான் சமீபகாலமாக தொடர்ந்து மதம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றார். அதாவது இஸ்லாமிய தந்தைக்கும் இந்து மதத்தை சார்ந்த அன்னைக்கும் பிறந்த இவர் இந்து மத வழிபாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சிவராத்திரியை முன்னிட்டு சிவ பக்தையான சாரா இன்ஸ்டாவில் சிவ வழிபாடுகளை மேற்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இந்தப் பதிவு தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதாவது கேதர்நாத் கோயிலில் பக்திமயமாக சிவனை வழிபட்ட புகைப்படங்களை சாரா வெளியிட்ட நிலையில், இஸ்லாமிய பின்னணியை மையமாக கொண்ட சாரா எப்படி இவ்வாறு பதிவிடலாம் எனக் கேட்டு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஒரு இஸ்லாமியப் பெண் இந்துக் கடவுளை வழிபடுவது தப்பு எனவும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் மற்றொரு புறம் இந்து அன்னைக்கும் பாட்டிக்கும் பிறந்த சாரா இப்படி இந்து மதத்தை பின்பற்றுவதில் தவறில்லை. எந்தக் கடவுளை சாரா வழிபட வேண்டும் என்பது அவரது தேர்வு என்று மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.
இதனைப் போலவே முன்னரும் சாரா அலி கான் தன் தோழியும் நடிகையுமான ஜான்வி கபூருடன் ஆன்மிக சுற்றுலா சென்றபோதும் இதேபோல் இவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் இஸ்லாமியப் பெண்ணான சாரா இந்துக் கடவுளை வழிபட்டதற்காக தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன.
Listen News!