• Nov 17 2024

தமிழ் முன்னாடி அர்ஜுனை தாறுமாறாகத் திட்டிய கோதை- வசுந்தலாவின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த சரஸ்வதி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுன் கோதை கம்பனிக்குப் போவதை தடுத்த தமிழ் அர்ஜுன் விட்ட சவாலைப் பற்றி சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார். அப்போது கோதை அர்ஜுனிடம் என்ன மாப்பிள்ளை நீங்க சின்னப் பிள்ளை மாதிரி எல்லாம் நடக்கிறீங்க. அவங்க என்ன பண்ணினலும் உங்களுக்கு என்ன என்று தாறுமாறாகத் திட்டுகின்றார்.


தொடர்ந்து தமிழிடம் இது எங்களோட கம்பனி அவர் உள்ள வருவாரு, அதைத் தடுக்கிறதுக்கு நீ யாரு அவரை உள்ளே வராமல் உன்னால தடுக்க முடியாது என்று தமிழையும் திட்டி விட்டு உள்ளே செல்கின்றார். தொடர்ந்து வீட்டுக்கு வரும் தமிழ் சரஸ்வதியிடம் இது பற்றி சொல்ல சரஸ்வதி அதிர்ச்சியடைகின்றார்.

பின்னர் சரஸ்வதியை வேலைக்கு போகலையா நீ என்று கேட்ட போது சரஸ்வதி தன்னுடைய கடை ஓனர் கடையை விற்கப்போவதாகவும் அந்த கடையை தன்னையே வாங்க சொன்ன விஷயத்தையும் சொல்கின்றார்.அப்போது தமிழ் இப்போ நாம இருக்கிற நிலமையில எப்படி புதுக்கடை எல்லாம் வாங்க முடியம் யோசிச்சுச் சொல்கின்றேன் என்று கூறுகின்றார்.

தொடர்ந்து கம்பனியில் தங்களுடைய பொருட்கள் விற்கப்படால் இருக்கிறது அதனை குறைந்த விலையில் கேட்கிறாங்க, யார் குறைவான விலையில் கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஆடரும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்ல அர்ஜுன் காசு கொடுத்து இந்த டீலை முடிச்சுக்கலாம் என்று சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார்.

அத்தோடு குறுக்கு வழியில் எதுக்கு யோசிக்கிறீங்க நேர் வழியில் எதையும் யோசிக்க மாட்டீங்களா என்று திட்டுகின்றார்.பின்னர் கோதை காரில் போய்க் கொண்டிருக்கும் போது கோதை மாப்பிள்ளை செய்யிறது எனக்கு ஒன்றும் சரியா படல என்று சொல்கின்றார். அப்போது நடேசனும் அர்ஜுன் செய்த ஒவ்வொரு விஷயத்தையும் நினைவுபடுத்துகின்றார். கோதையும் அர்ஜுன் செய்யிறது பற்றி யோசிக்கின்றார்.


தொடர்ந்து சரஸ்வதியை கோயிலில் சந்தித்த வசுவும் சந்திரகலாவும் குழந்தைக்கு பெயர் வைக்கிற பங்சன் வைக்கப்போறோம் கட்டாயம் நீங்க வரணும் என்று சொல்லி நேட்டீஸை கொடுக்க சரஸ்வதி யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement