• Sep 20 2024

சரஸ்வதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ்- பயந்து நடுங்கிய நமச்சி- வெளியாகிய சுவாரஸியமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் அர்ஜுன் செய்து வரும் தில்லாலங்கடி வேலையால் கோதைக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வந்து விட்டது. அர்ஜுனை முழுமையாக நம்பக் கூடாது என்ற முடிவில் இருக்கின்றார்.

இதனால் வெகு சீக்கிரத்தில் அர்ஜுன் பற்றி கோதைக்கு தெரிய வந்தால் கோதை என்ன முடிவு எடுப்பார். தமிழ் மீண்டும் கோதையுடன் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சரஸ்வதி வேலை பார்க்கும் மெக்கானிக் செட்டை தமிழ் சரஸ்வதிக்கு தெரியாமல் அந்த செட்டை இரண்டரை லட்சம் கொடுத்து வாங்குகின்றார். இதனை அந்த கடை முதலாளி சொல்ல சரஸ்வதி தமிழிடம் வந்து கேட்க வர தமிழ் எதுவும் தெரியாதது போல பேச சரஸ்வதி டொக்கிமென்டைக் காட்டி தமிழை விட்டுக் கலைத்து அடிக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement