பழம்பெரும் நடிகர் சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது..
கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரத்பாபு முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல ஹிட்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதுகளை வென்றுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சரத்பாபு, வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சரத்பாபுவிற்கு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக, உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தார். இதனால், ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 1.30மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
சரத்பாபுவின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாகவும், வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இவரது ஆன்மா சாந்தி அடைய இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!