• Sep 20 2024

தளபதி 66 படம் பற்றி பல தகவல்களை கூறிய சரத்குமார்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது

தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சென்சேஷன் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார்.

அத்தோடு, தமன் இசையமைக்க சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது சரத்குமார் தளபதி 66 படத்தைப்பற்றி முதன்முதலில் பேசியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது…தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்று முடிக்கப்படும். மேலும் இப்படத்தின் கதைக்கரு மிகவும் அழுத்தமானதாகவும், அதே சயமத்தில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்த படமாகவும் இருக்கும் என்றார் சரத்குமார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முடிந்துவிடும் என்று சரத்குமார் கூறியுள்ளதால் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளன்று இப்படத்தின் டீசரோ அல்லது முதல் பார்வையோ வெளியாகுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இப்படத்தில் எமோஷ்னல் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்றும், சண்டை காட்சிகள் இல்லை என்றும் ஒரு தகவல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement