• Nov 10 2024

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிய சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி சிவா. இவரை அவருடைய ரசிகர்கள் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்று தான்  அழைக்கிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி  இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் தான் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்”. 

இப்படத்தில் மகாபா, பாடகர் மன, கேபிவை பாலா, ஷாரா, திவ்யா கணேஷ் போன்றவர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படம் நேற்றைய தினம் இப்படம் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் குறித்து வாங்க பார்க்கலாம்


கதைக்களம்

இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் ஸ்விக்கியில் வேலை பார்த்து வருகிறார் சிவா. மொரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஷாரா  செயற்கை நுண்ணறிவுவுடன் பெண்ணின் உணர்வுகளுடன் கூட ஒரு ஸ்மார்ட்போனை ஷாரா தயாரிக்கிறார். இந்த ஸ்மார்ட் போன் எப்படியோ சிவாவின் கைகளில் கிடைத்து விடுகிறது. அந்த ஸ்மார்ட் போன் மூலம் சிவாவின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. சிவா தான் ஆசைப்பட்ட பல விஷயங்களை அந்த ஸ்மார்ட்போன் மூலம் தீர்த்துக்கொள்கிறார். அதே சமயத்தில் இப்படி சிவாவுக்கு உதவி செய்யும் போது சிம்ரனுக்கு சிவாவின் மீது காதல் வந்து விடுகிறது. ஆனால் இந்த காதலை சிவா மறுக்கவே அந்த ஸ்மார்ட்போன் சிம்ரன் செய்யும் லீலைகளினால் சிவாவிற்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்பதை தான் மையமாக கொண்டு இப்படமானது உருவாகியுள்ளது.

படம் பற்றிய அலசல்

கடந்த 50 ஆண்டுகளில் மட்டுமே தொழிநுட்பம் பெரிய அளவில் பெருகி தற்போது AI உலகத்தை ஆளா தொடங்கி விட்டது அதனை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இதனை மையமாக வைத்துதான் இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது.பல படங்களுக்கு பின்னர் இப்படத்தில் ’ சிவா மீண்டும் திரைக்கு திரும்பிய அனுபவத்தை இப்படம் கொடுத்திருக்கிறது.

 அதே போல விஜய் டிவி மாகாபா ஆனந்திற்கு இப்படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அத்தோடு சிவாவின் அப்பாவாக வரும் பாடகர் மனோ பல ஆண்டுகள் கழித்து தான் ஒரு பாடகர் மட்டுமல்ல ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.


ஆனால் கதையின் உண்மையான காதலியாக வரும் மேகா ஆகாஷிற்கு குறைவான இடமே கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஒரு சாதாரண பெண்ணாக என்ன செய்ய முடியுமோ அதனை செய்திருக்கிறார்.அதே போல திரைக்கதையை சுவாரசியமாக நகர்த்தியதன் மூலம் பார்வையாளர்களுக்கு போரடிக்காமல் வைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் . 

குறை : இசையில் இனமும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். லாஜிக் குறைபாடுகள் ஆனால் பரவாயில்லை. மொட்டை ராஜேந்திரன் காமெடி கதைக்கு சரியாக பொருந்தவில்லை.


 நிறை : பழைய சிவாவை பார்க்க முடிந்தது. ஒளிப்பதிவு பிரமாதம். மகாபா, பாடகர் மனோ போன்றவர்க்ளின் நடிப்பு பிரமாதம். திரைக்கதை சூப்பர். மொத்தத்தில் இப்படம் லாஜிக் தவிர்த்து சிரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.


Advertisement

Advertisement