• Nov 17 2024

சித்தார்த்தின் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படத்தின் திரை விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் சித்தா. இப்படத்தில் சித்தார்த்தின் மகளாக சஹஸ்ரா ஸ்ரீ என்பவர் நடித்துள்ளார். எனவே இத்திரைப்படத்தின் விமர்சனம் குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.

அதன்படி கதைக்களமாவது

ஒரு சிறு ஊரில் தன் அண்ணன், அண்ணி, அவர்களின் 8 வயது மகள் சுந்தரிஆகியோருடன் வசித்து வருகிறார் ஈசு(சித்தார்த்). அண்ணன் மகள் சுந்தரியை சேட்டை என செல்லமாக அழைக்கிறார் ஈசு.அண்ணன் திடீரென்று இறந்துவிடவே குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் ஈசு. இந்நிலையில் பள்ளியில் உடன் படித்த சக்தி (நிமிஷா சஜயன்)மீது ஈசுக்கு காதல் ஏற்படுகிறது.


தன் அண்ணன் மகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் ஈசு.எல்லாம் நன்றாக செல்லும்போது சேட்டை காணாமல் போகிறார். தன் அண்ணன் மகள் சேட்டையை கண்டுபிடிக்கிறாரா சித்தார்த் என்பதே படத்தின் மீதிக் கதை எனலாம்.

படம் பற்றிய அலசல்

சேட்டை மற்றும் சித்தா இடையேயான உறவை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் குமார். மேலும் இப்படத்தில் பாலியல் பலாத்காரம், கொலை செய்யும் நபரின் கையில் சிறுமி சேட்டை சிக்குவதை பார்க்க கடினமாக இருக்கிறது. படத்தில் அந்த கொடூரங்களை அப்படியே காட்டாவிட்டாலும் பயம் பார்ப்போதை கலங்கச் செய்துள்ளது.


நடக்கக் கூடாது என நினைத்த விஷயம் நடந்த பிறகு வரும் காட்சிகளால் பரபரப்பு ஏற்படுகிறது. படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். சித்தார்த்தின் நடிப்பு தனித்து தெரிகிறது. முதல் தமிழ் படத்திலேயே நம்மை கவர்கிறார் நிமிஷா சஜயன். இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சஹஸ்ரா ஸ்ரீயின் நடிப்பு அருமை. மொத்தத்தில் சித்தா திரைப்படம் சித்தார்த்திற்கு நல்லதொரு கம்பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement