• Nov 17 2024

மாஸாக வெளியாகிய துணிவு படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் உருவாகி திரைப்படம் தான் துணிவு. போனி கபூர், வினோத், அஜித் ஆகியோரின் கூட்டணியில் 3வது முறையாக வந்துள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்துள்ளது.அந்த வகையில் இப்படமானது அன்றைய தினம் காலை 1மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி படம் எப்படி இருக்கு என்று வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

சென்னையில் ஒரு தனியார் வங்கியை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் போலிஸ் உதவியுடன் கொள்ளையடிக்க வருகிறது. வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போடுகிறார்.அஜித்துடன் போலிஸ் பேச்சு வார்த்தை நடத்த, ஒரு கட்டத்தில் அந்த வங்கியில் மிகப்பெரிய எக்ப்ளோசிவ் பாம் கிடைக்கிறது. அப்போது தான் தெரிகிறது, உள்ளே மூன்றாவதாக ஒரு டீம் இருக்கிறது என, பிறகு இந்த அயோக்கியர்களுக்குள் நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை.


படம குறித்த அலசல்

அஜித் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் என்றாலே செம குஷியாக ஆகிவிடுகிறார், தனது மேனரிசம், டயலாக் டெலிவெரி என பட்டாசு கிளப்புகிறார். அதிலும் பேங்க் உள்ளே சென்று அவர் செய்யும் சேட்டைகள் கலகலப்புக்கு பஞ்சமில்லை எனலாம்.

படத்தில் ஒரு பேங்கில் நடக்கும் மோசடியை வெளியே கொண்டு வர நடக்கும் கதை தான், இதற்காக வினோத் எளிய மக்களுக்கும் புரியும் படி பேங்க்-ல் நடக்கும் விஷயங்களை குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதில் நடக்கும் குளறுபடிகளை தோல் உரித்து காட்டியுள்ளார்.

படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர். அதிலும் மைபா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரம் கலக்கலாக உள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள் தான்.


 ஜிப்ரானின் பின்னணி இசை சில இடங்களில் டயலாக்கை தாண்டி கொஞ்சம் இரைச்சலை தருகிறது.படத்தின் முதற்பாதி முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது, இரண்டாம் பாதி 10 நிமிடம் சோர்வை தந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பை தருகிறது.

படத்தின் முதல்பாதி அஜித்தின் நடிப்பு, ஒவ்வொரு காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement